fbpx

எதிர்பாராததை எதிர்பாருங்கள்..!! அதுக்குன்னு இப்படியா..? ஒரே நேரத்தில் 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரவாரத்தோடு கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் நிக்சன், பிரதீப், மணி, விஷ்ணு, விஜய் வர்மா, பவா செல்லதுரை, விக்ரம், யுகேந்திரன், கூல் சுரேஷ் ஆகிய 9 ஆண் போட்டியாளர்களும், அனன்யா ராவ், விசித்ரா, ஜோவிகா, பூர்ணிமா, மாயா, ரவீனா, ஐஷூ, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 9 பெண் போட்டியாளர்களும் கலந்துகொண்டனர்.

இதுவரை முடிந்துள்ள மூன்று வாரத்தில் அனன்யா ராவ் மற்றும் விஜய் வர்மா ஆகியோர் எலிமினேட் ஆகி வெளியேறினர். இரண்டாவது வாரத்தில் பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் தற்போது 15 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இந்நிலையில், வைல்டு கார்டு என்ட்ரி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

வழக்கமாக வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே அனுப்பப்படுவார்கள். ஆனால், பிக்பாஸ் 7-வது சீசன் பல்வேறு புதுமைகளை கொண்டது என்பதால், வைல்டு கார்டு எnட்ரியிலும் ஒரு அதிரடி மாற்றம் செய்துள்ளனர். அது என்னவென்றால், ஒரே நேரத்தில் 5 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக அனுப்ப உள்ளார்களாம். இதனை கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்த 5 போட்டியாளர்களும் அக்டோபர் 28ஆம் தேதி இரவு 8 மணிக்கு பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். ஏற்கனவே கானா பாலா மற்றும் சீரியல் நடிகை அர்ச்சனா ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்கு வைல்டு கார்டு போட்டியாளராக செல்ல உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், எஞ்சியுள்ள 3 போட்டியாளர்கள் யார் என்பது தான் தற்போது புரியாத புதிராக இருக்கிறது.

Chella

Next Post

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம்..!! சைலேந்திரபாபுவை நிராகரித்த ஆளுநர்..!! புதிய நபரை தேர்வு செய்யுங்க..!!

Mon Oct 23 , 2023
டிஎன்பிஎஸ்சி தலைவராக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்கள் நியமனம் குறித்த தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்திருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஜூன் 30ஆம் தேதி தமிழக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு ஓய்வு பெற்றார். இதையடுத்து, இவரை டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. இதை தொடர்ந்து, தலைவராக சைலேந்திரபாபு மற்றும் உறுப்பினர்கள் 8 பேரை புதிதாக நியமித்து, ஆளுநரின் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், […]

You May Like