fbpx

முன்பே எச்சரித்த வல்லுநர்கள்..!! வேலையை காட்டத் தொடங்கிய AI..!! ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு..!!

AI தொழில்நுட்பத்தால் வேலையிழப்புகள் ஏற்படலாம் என்ற வல்லுநர்களின் எச்சரிக்கை உண்மையாகியுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் வேற லெவலில் வளர்ச்சியைப் பெறும். கடந்த காலங்களில் கணினி, மொபைல் எனப் பல சாதனங்களை இதற்கு நாம் உதாரணமாகச் சொல்லலாம். இந்த காலம் சந்தேகமே இல்லாமல் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு ஆனது என்றே சொல்லலாம். இது டெக்னாலஜியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று வருகிறது.. ஏஐ தொழில்நுட்பத்தை சாட் ஜிபிடிக்கு முன்பு, சாட் ஜிபிடிக்கு பின்பு என பிரிக்கலாம்.

சாட் ஜிபிடி நாம் பார்க்கும் முதல் ஏஐ கருவி இல்லை என்றாலும் கூட இதுவரை இந்தளவுக்கு ஒரு வலிமையான ஏஐ கருவியைப் பார்த்தே இல்லை. கதை, கவிதை அவ்வளவு காதல் கடிதம் கூட இது எழுதித் தரும். மேலும், பல தேர்வுகளைக் கூட இந்த சாட் ஜிபிடி அசால்டாக க்ளியர் செய்து வருகிறது. இது மற்ற ஏஐ சாப்ட்வேர்களுக்கும் நல்ல ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது. ஒரு தரப்பினர் இதைக் கொண்டாடினாலும் கூட மற்றொரு தரப்பினர் தொடர்ந்து எச்சரித்தே வருகின்றனர். ஏஐ தொழில்நுட்பத்தால் பல லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்து வந்தனர். ஆனால், இது வெற்று எச்சரிக்கை இல்லை. இவை ஏற்கனவே உண்மையாக மாற தொடங்கிவிட்டது. ஆம், ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்கனவே வேலையிழப்புகள் ஆரம்பித்துவிட்டது.

கடந்த மே மாதம் மட்டும் அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சுமார் 4,000 பேர் செயற்கை நுண்ணறிவு காரணமாக வேலை இழந்ததாக சேலஞ்சர், கிரே & கிறிஸ்மஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் 3,900 பேர் ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழந்துள்ளனர். இது மே மாதம் ஏற்பட்ட வேலையிழப்பில் 4.9% ஆகும். கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை அமெரிக்காவின் வேலைவாய்ப்பு சந்தை எப்படி இருந்தது என்பதை இதில் விளக்கியிருந்தார்கள்.

இந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 4.17 லட்சம் பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர். கொரோனா சமயத்தில் 2020ஆம் ஆண்டு முதல் 5 மாதங்களில் சுமார் 14 லட்சம் பேர் வேலையிழந்த நிலையில், அதன் பிறகு இந்தாண்டில் தான் வேலையிழப்பு அதிகமாக இருந்துள்ளது. கொரோனாவுக்கு முன்பு எனப் பார்த்தால் கடந்த 2009இல் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போது 8,20,000 பேர் வேலையிழந்தனர். மேலும், Consumer confidence ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது.. புதிய வேலைவாய்ப்புகள் உருவாவதும் குறைந்துள்ளது. மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலை வரும் என்று நிறுவனங்கள் அஞ்சுவதே புதிய வேலைவாய்ப்புகள் உருவாமல் போக காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இதில் ஏஐ காரணமாக மட்டும் சுமார் 5,000 பேர் மே மாதம் வேலையிழந்துள்ளனர். மேலும், கம்பெனியே மூடப்படுவதால் 19,600 பேர் வேலையிழந்துள்ளனர். மார்கெட் சூழலைக் காரணம் காட்டி 14,600 பேரையும் எந்தவொரு காரணத்தைக் குறிப்பிடாமல் 12,900 பேரையும் பெரு நிறுவனங்கள் வேலையை விட்டு நீக்கியுள்ளன. மற்ற காரணங்களைக் காட்டிலும் ஏஐ காரணமாக வேலையிழப்பு என்பதே பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில், முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாச்ஸ் ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் வேலையிழப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ஏஐ தொழில்நுட்பத்தால் சர்வதேச அளவில் 30 கோடி பேர் வேலையிழப்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, தற்போதைய வேலையில் இருப்போரில் 5இல் ஒருவர் இதனால் பாதிக்கப்படலாம் எனக் கூறப்பட்டிருந்தது.

அதேநேரம் மற்றொரு தரப்பினர் இதை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். குறைந்த சம்பளம் தரும் வேலைகளே ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படுமாம். அதாவது மீண்டும் மீண்டும் ஒரே பணியைச் செய்வது போன்ற வேலைகள் தான் சாட் ஜிபிடியால் காணாமல் போகும். மறுபுறம் அதிக ஊதியம் கிடைக்கும் வேலைகள் அதிகரிக்கும் என்றும் இதனால் பலரது வாழ்க்கைச் சூழல் மேம்படவே செய்யும் என்கிறார்கள். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சாட் ஜிபிடியை உருவாக்கிய சாம் ஆல்ட்மேன் இதையே தான் கூறியிருந்தார். மனிதர்கள் வாழ எந்த நோக்கமும் இல்லை என்ற சூழலை ஏஐ நிச்சயம் உருவாக்காது என்றும் ஏஐ தொழில்நுட்பம் என்பது பணியாளர் ஒருவருக்கு 100 உதவியாளர்களைத் தருவதற்குச் சமம் என்றும் கூறியிருந்தார். நமது பணியை எளிமையாக்கவே செய்யும் எனக் கூறியிருந்தார். இருப்பினும், ஏஐ என்ன மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதைக் காலம் தான் பதில் சொல்லும்.

Chella

Next Post

வெஃப் சீரியஸை பார்த்து நகைக்கடைக்குள் திருட சென்ற 3 சிறுவர்கள்..!! திடீரென அடித்த அலாரம்..!! தெறித்து ஓடிய பின்னணி..!!

Tue Jun 6 , 2023
பிரபலமான வெஃப் சீரிஸால் ஈர்க்கப்பட்ட 3 சிறுவர்கள், நகைக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் மதியோனில் வசிக்கும் ஹர்ஷ் மகேஸ்வரி என்பவர் அந்த பகுதியில் நகை கடை ஒன்றை வைத்துள்ளார். கடந்த 30ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த 3 மைனர் இளைஞர்கள் திடீரென நகை கடைக்குள் புகுந்து கதவை அடைத்துள்ளனர். மேலும், தங்களிடம் இருந்த கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டி, கடையில் இருக்கும் அனைத்து […]

You May Like