டாஸ்மாக் கடையில் காலாவதியான பீர் குடித்த 2 பேர் வாந்தி,மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் வடிவேல், விற்பனையாளர் சங்கர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே டாஸ்மாக்கில் காலாவதியான பீர் வாங்கி குடித்த வாலிபர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டதை அடுத்து அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா காரைமேடு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்( 31) நாங்கூர் மேலத் தெருவை சேர்ந்தவர்கள் சார்லஸ்(27), ஆகிய கடையில் உள்ள டாஸ்மாக் கடையில் உள்ள பிற்பனலக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையில் பிர் குடித்த அடுத்த சில மணி நேரத்தில் இருவருக்கும் வாந்தி, மயக்கம் மற்றும் பேதி ஏற்பட்டது.
அருகில் இருந்த அவரது நண்பர் அளக்குடி பிரகாஷ் என்பவர் மற்ற நண்பர்களுடன் இருவரையும் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மணிகண்டன் மற்றும் சார்லஸ் ஆகிய இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த சீர்காழி காவல்துறை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அரசு டாஸ்மாக் கடையில் வாங்கிய டின் பீர் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதியுடன் காலாவதி ஆனது தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் காலாவதியான பீர் குடித்த 2 பேர் வாந்தி. மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் வடிவேல், விற்பனையாளர் சங்கர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.