மேற்கு ஆப்பிரிக்காவில் நடந்த IED குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பொதுமக்கள் உயிரிழந்தனர், 37 பேர் காயமடைந்துள்ளனர்..
மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பாசோவின் ஜிஹாதிகளால் பாதிக்கப்பட்ட வடக்கில் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களளில் IED குண்டு வெடித்ததில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 37 பேர் காயமடைந்தனர் என்று சஹேல் பிராந்தியத்தின் ஆளுநர் கூறினார். மேலும் “பொதுமக்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று, வெடிகுண்டு சாதனத்தில் மோதியது. தற்காலிக எண்ணிக்கையில் 35 பேர் இறந்துள்ளனர் மற்றும் 37 பேர் காயமடைந்துள்ளனர், அனைத்து பொதுமக்கள்,” என்று ஆளுநர் ரோடோல்ஃப் சோர்கோ தெரிவித்தார்.
அந்நாட்டின் ராணுவம், வாகனங்களில் வடக்கு பகுதிக்கு பொருட்களைக் கொண்டு சென்ற பொது டிஜிபோவிற்கும் போர்சங்காவிற்கும் இடையில் இந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது என்று அவர் கூறினார்.
ஆகஸ்ட் தொடக்கத்தில், அதே பகுதியில் இரட்டை IED குண்டுவெடிப்பில் 15 வீரர்கள் இறந்தனர். மீபத்தில் வடக்கில் உள்ள முக்கிய நகரங்களான டோரி மற்றும் டிஜிபோவிற்கு செல்லும் சாலைகளில் இதேபோன்ற தாக்குதல்களை தீவிரவாதக்குழுக்கள் நடத்தியுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் புர்கினோ பாசாவில் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது.. அங்கு அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த தாக்குதகளில் 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. சுமார் 1.9 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
அல்-கொய்தா அல்லது இஸ்லாமிய அரசு குழுவுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஜிஹாதிகளின் தலைமையில் வடக்கு மற்றும் கிழக்கில் சண்டைகள் தீவிரமடைந்துள்ளன..
நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம் அதிகாரத்தைக் கைப்பற்றிய புர்கினாவின் ஆளும் ஆட்சிக்குழு, கிளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தை முதன்மையானதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..