fbpx

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படலாம்!… மத்திய அரசின் தகவலால் அதிர்ச்சி!

வரும் அக்டோபர் மாதம் முதல், சர்க்கரை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், போதிய மழையில்லாததால் கரும்பு விளைச்சல் குறைந்து வருவதால், அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்த சீசனுக்கான சர்க்கரை ஏற்றுமதியை இந்தியா தடை இருப்பதாக தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை சராசரிக்கும் குறைவாக 50 சதவீதம் வரை பெய்துள்ளது. இதனால் கரும்பு விளைச்சல் குறைந்துள்ளது. அப்படி தடைவிதிக்கும்பட்சத்தில், கடந்த ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக விதிக்கப்படும் தடையாக அது இருக்கும் என்றும் இதனால் உலக அளவில் சர்க்கரை விலை உயரலாம், இது உலக உணவுச் சந்தைகளில் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பணவீக்கம் குறித்த கவலைகளை இந்தியா எதிர்கொண்டுள்ளதால், ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7.4 சதவீதமாக எட்டியது, மேலும் உணவுப் பணவீக்கம் 11.5 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி கடந்த ஆண்டை விட 3.3 சதவீதம் குறைந்து 2023-24ல் 31.7 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. முந்தைய பருவத்தில் 11.1 மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய, நடப்பு பருவத்தில் 6.1 மில்லியன் டன் சர்க்கரையை மட்டுமே ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதியளித்துள்ளது.

உள்ளூர் சர்க்கரை தேவையை பூர்த்தி செய்வதும், உபரி கரும்பில் இருந்து எத்தனாலை உற்பத்தி செய்வதும் தான் தங்களின் முதன்மையான கவனமாக இருக்கும் என்றும், இதனால், ஏற்றுமதிக்கான சர்க்கரையை ஒதுக்க இயலாது என்றும் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உணவுப் பணவீக்கத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பைக் கருத்தில் கொண்டு, நாட்டிற்குள் போதுமான அளிப்புகள் மற்றும் நிலையான விலைகளை உறுதி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சர்க்கரை ஏற்றுமதியை நிறுத்தும் நடவடிக்கை, பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு அண்மையில் விதிக்கப்பட்ட தடை மற்றும் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிப்பு போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் உணவு பணவீக்கம் கவலை அளிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Kokila

Next Post

பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு நிலவில் நிலம் இருப்பது தெரியுமா?... ரசிகை ஒருவர் பரிசளித்த சுவாரஸியம்!

Thu Aug 24 , 2023
ஆஸ்திரேலிய பெண் ரசிகர் ஒருவர் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் நிலவில் நிலம் வாங்கி அதைப் பத்திரப் பதிவு செய்து அனுப்பி வைப்பது சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஷாரூக் கான், ஒரு ஆஸ்திரேலியப் பெண், ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளில் எனக்காக நிலவில் ஒரு சிறிய நிலத்தை வாங்குகிறாள். லூனார் ரிபப்ளிக் சொசைட்டியிலிருந்து இந்த நிலத்திற்கான பத்திரப்பதிவு சான்றிதழ்களைப் […]

You May Like