fbpx

காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதற்கான தடை நீட்டிப்பு : உச்சநீதிமன்றம்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது..

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நீர் பங்கீடு முறையாக வழங்கப்படவில்லை என்று கர்நாடக அரசு மீது தமிழக அரசு குற்றம்சாட்டியது.. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக அரசு தரப்பு, தமிழகத்தில் முறையாக நீர் பங்கீடு அளிக்கப்படுவதாக தெரிவித்தது.. மேலும் மேகதாது விவகாரத்தை காவிரி மேலாண்மை கூட்டத்தில் விவாதிக்க விரும்புகிறோம் என்று வாதிடப்பட்டது..

அப்போது நீதிபதிகள் மேகதாது விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தை அறிய விரும்புவதாக கூறிய நீதிபதிகள் தெரிவித்தனர்.. அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. மேலும் இந்த வழக்கை வரும் 26-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்..

இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, மத்திய அரசு தரப்பில் சோசலிட்ட ஜெனரல் ஆஜராகவில்லை.. எனவே மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கை அடுத்த மாதம் 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.. அதற்கு இடைப்பட்ட காலத்தில் காவிரி மேலாண்மை கூட்டம் நடைபெறும் பட்சத்தில் இந்த கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க கூடாது என்ற உத்தரவு தொடர்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்..

Maha

Next Post

வரும் 28ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எடப்பாடி, ஓபிஎஸை தனித்தனியே சந்திக்கும் பிரதமர்..!

Tue Jul 26 , 2022
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சென்னை வரும் பிரதமர் மோடி, தனித்தனியாக அழைத்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள போட்டி உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவின் முக்கிய கூட்டாளியான பாஜக இந்த விசயத்தில் இன்னமும் மதில் மேல் பூனையாகவே உள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரது ஆதரவை பெற்று தங்களது நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் […]
வரும் 28ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எடப்பாடி, ஓபிஎஸை தனித்தனியே சந்திக்கும் பிரதமர்..!

You May Like