நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, திரும்பப் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் பற்றிய கேள்வி எழுப்பியதற்கு மக்களவையில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் 2017 ஆம் வருடத்திற்கு முன்பே 89 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் வெளியானதால் அதன் பயன்பாடு காலம் ஐந்து ஆண்டுகள் வரை என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன் பிறகு ரிசர்வ் வங்கி மேற்கொண்ட கணக்கெடுப்பின் அடிப்படையில 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனைக்கு இனி முன்னுரிமை வழங்கத் தேவையில்லை என்ற முடிவெடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 19 ஆம் தேதி அந்த 2000 ரூபாய் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம 3,56,000 கோடி மதிப்பில் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. தற்போது வரை 2,72,000 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே இன்னும் 84,000 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் தான் இவற்றை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 தான். இந்த கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து எந்த பரிசீலனையும் இதுவரை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.