சென்னையில் பர்மிட் பெற்று இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான எல்லையை சி.எம்.டி.ஏ. வரை நீட்டித்து போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது. பர்மிட் நீட்டிப்பு மூலம் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்கள் வரை ஆட்டோக்களை இயக்கலாம்.
மேலும், சி.எம்.டி.ஏ. எல்லை வரை அனுமதி வழங்கியதன் மூலம் எல்லை தாண்டியதாக இனி ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட இயலாது. சிஎம்டிஏ எல்லை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால், ஆட்டோக்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.