fbpx

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!!

அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பல காரணங்களால் பலர் பணி விலகிய நிலையில், தற்போது 12,000 பேர் ரூ.10,000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும் 60-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!!

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்கள், தையல், இசை, கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற பாடங்களை பகுதி நேர ஆசிரியர்கள் கையாளுகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு நடப்பு செப்டம்பர் மாதம் முதலே அமலுக்கு வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Chella

Next Post

’இதை செய்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்’..!! அமைச்சர் ஐ.பெரியசாமி புதிய அறிவிப்பு..!!

Tue Sep 27 , 2022
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற சுமார் ஒரு லட்சம் பேர், உறுதிமொழி பத்திரம் வழங்கினால், அவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் தற்போது வரை 5 லட்சத்து 22 ஆயிரத்து 514 விவசாயிகளுக்கு, 3,969 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 14 […]
’இதை செய்தால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்’..!! அமைச்சர் ஐ.பெரியசாமி புதிய அறிவிப்பு..!!

You May Like