fbpx

Good News: பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பதவிக் காலம் நீட்டிப்பு…! தமிழக அரசு அரசாணை…!

பள்ளிக் கல்வித் துறையில் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் பதவிக் காலம் நீட்டிப்பு அரசாணை வெளியீடு.

தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித்துறையின்கீழ் செயல்படும் அரசுத் தொடக்கப் பள்ளிகள். நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் ஆகிய அனைத்து வகைப் பள்ளிகளின் சீரான செயல்பாடுகளுக்குத் துணைபுரியும் வகையில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மாதங்களில் திருத்தி அமைக்கப்பட்டன. இந்த அனைத்து வகைப் பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினர்களுடைய பதவிக் காலம் 2024 ஏப்ரல், மே, ஜூலை மாதங்களில் முடிவடைய உள்ளன.

2024-2025 ஆம் கல்வியாண்டில் புதிதாகச் சேரும் மாணவர்களின் பெற்றோர்களையும் உள்ளடக்கிய புதிய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைக்கும் பொருட்டு, 2022-2024 ஆம் ஆண்டிற்கான தொடக்கப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 1-5-2020 முதல் 10-8-2024 வரையும், நடுநிலைப் பள்ளிகளுக்கான மேலாண்மைக்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் 24-4-2024 முதல் 20-7-2024 வரையும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் மேலாண்மை குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் 10-7-2024 முதல் 17-8-2024 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்குரிய அரசாணை 29-2-2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது என்றும் பள்ளிக் கல்வித்துறை அரசுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

Election 2024: தமிழகத்தில் ஏன் பாஜக வேட்பாளர்களை அறிவிக்கவில்லை...? இது தான் காரணம்...

Sun Mar 3 , 2024
கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் மாநிலங்களுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சிட்யின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே. வரும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் 34 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி […]

You May Like