fbpx

அசத்தல்…! பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு…! எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம் இதோ…

நவம்பர் 15-ம் தேதிக்குள் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள், வரும் 21-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை காலநீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது.

நவம்பர் 15-ம் தேதிக்குள் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள், வரும் 21-ம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேளாண்மைத்துறை காலநீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது.

அதன் படி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 21.11.2022 ஆகும். கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இரண்டாம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நெல் விவசாயிகள் டிசம்பர் 15-ம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

எப்படி விண்ணப்பிப்பது….?

பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளாக இருந்தால், சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையங்களிலும் (இ-சேவை மையங்கள்) காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும், https://pmfby.gov.in/ என்ற இணையதளத்தில் “விவசாயிகள் கார்னர்” எனும் பக்கத்தில் விவசாயிகள் நேரிடையாகவும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

இந்த 4 பொருளை சாப்பிட்டால் கருவில் உள்ள குழந்தை வெள்ளையா பிறக்குமாம்!!

Sat Nov 19 , 2022
பெரும்பாலான பெண்கள் விரும்புவது பிறக்கப்போகும் குழந்தை வெள்ளையாகவும் கொழு கொழுன்னு அழகாகவும் பிறக்க வேண்டும் என்பதைத்தான். ஒருபுறம் ஜீன் காரணமாக இருந்தால் கூட இந்த உணவுப்பொருட்கள் வெள்ளையான குழந்தை பேறுக்கு உதவுகின்றது. பெண்கள் கருவுற்று 4 மாதத்தில் இருந்தே இந்த உணவுப்பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கட்டாயம் குழந்தை வெள்ளையாக பிறக்கும் என்கின்றனர். பெரும்பாலானோர் குங்குமப்பூ சாப்பிட்டு வர குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதை கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால், […]

You May Like