fbpx

மனை வரன்முறை திட்டம்… 2024 பிப்ரவரி மாதம் வரை நீட்டிப்பு…! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!

அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டம் 29.02.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

04.09.2023 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது நீட்டிப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.!

Sun Nov 26 , 2023
சர்க்கரை நோய் இன்று உலகில் பெரும்பாலான மக்களை வாட்டி வதைக்கும் கடுமையான நோய்களில் முதன்மையில் இருக்கிறது. வயது வித்தியாசமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு நோயாகும். முறை மாற்றங்கள் அதிக கொழுப்பு உள்ள உணவு முறை மற்றும் மரபணு ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுகளை […]

You May Like