fbpx

வங்கிக் கணக்கில் கூடுதல் பொங்கல் பரிசுத்தொகை..!! முதலமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் பொங்கல் பணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.500 ஏற்கனவே வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.250 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது.

இந்த பரிசு தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகையை பெறுவதன் மூலம் புதுச்சேரியில் 1,30,791 குடும்பங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

"ஆணின் குரோமோசோம்கள் தான் குழந்தையின் பாலின.."! வரதட்சனை கொடுமை வழக்கில் நீதிபதி அறிவுரை.!

Fri Jan 12 , 2024
டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறது. மேலும் அந்த பெண்ணின் பெற்றோர் குறைவான வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்ததால் கணவரின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை கொடுமை செய்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். தங்களது மகளின் தற்கொலைக்கு நியாயம் வேண்டி அவரது பெற்றோர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த […]

You May Like