ஆசிரியர்களை நம்பி பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை படிக்க அனுப்பி வைக்கும் நிலையில், அங்கு ஆசிரியரின் பெயரில் அரக்கன் செய்யும் வேலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பக்ரைச் மாவட்டம், விஷேஷவர்கஞ்ச், சிவ்பூர் பைராகி கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், அங்குள்ள பள்ளி சிறுமிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
அந்த ஆசிரியர், வகுப்பறையில் உள்ள நாற்காலியின் மீது அமர்ந்து இருக்கும் நிலையில், தோள்பையுடன் வந்திருக்கும் சிறுமியை அழைத்து முத்தம் கொடுத்து அனுப்பி வைக்கிறார். இதனை அங்கிருந்தவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.