fbpx

’முகத்தோற்றம் கொண்ட கடல் அலைகள்’..!! ஒரு ஃபோட்டோவுக்காக 12 மணி நேரத்தை செலவிட்ட புகைப்பட கலைஞர்..!!

ஒரு நிகழ்வையோ, நபரையோ படம் பிடிக்க வேண்டும் என்றால், புகைப்பட கலைஞர்கள் மேற்கொள்ளும் மெனக்கெடல்கள் வார்த்தைகளில் எளிதாக சொல்லிவிட முடியாது. குறிப்பாக வன விலங்குகள், இயற்கை நிகழ்வுகள் அல்லது இயற்கையின் அழகை போட்டோவாக எடுப்பது சற்று சவால் நிறைந்த பணியாகவே இருக்கும். இதற்காக மணிக்கணக்கில் காத்திருப்பதும் முக்கியத்துவமானதாக இருக்கும். அந்த வகையில், இயற்கையின் ஓர் அங்கமான கடல் அலைகளை போட்டோ எடுக்க லண்டனை சேர்ந்த போட்டோகிராஃபர் ஒருவர் கிட்டத்தட்ட 12 மணிநேரம் காத்திருந்துள்ளார்.

வெறும் கடல் அலைகளை எடுப்பதற்காக எதற்கு இத்தனை மணிநேரம்..? என்ற கேள்வி எழலாம். ஆனால், அந்த அதனை வெறும் கடல் அலையாக மட்டும் எடுக்காமல் அலைகள் பொங்கியெழுந்து தணியும் போது வருவதை போட்டோவாக பதிவு செய்திருக்கிறார் இயன் ஸ்ப்ரோட். இங்கிலாந்தின் சண்டெர்லேண்ட் பகுதியில் உள்ள கடற்கரையின் ரோகர் பையர் கலங்கரை விளக்கத்தில் கடல் அலைகள் சீராக பாய்ந்து வந்து செல்வதைதான் துல்லியமாக படம் பிடித்திருக்கிறார். கடல் அலைகள் கலங்கரை விளக்கத்தின் உச்சி வரை பட்டு தெறித்து விழும் போது முகத்தோற்றம் போன்ற அமைப்புடன் இருப்பதைதான் இயன் போட்டோ எடுத்திருக்கிறார்.

இதற்கு 12 மணிநேரம் காத்திருந்து 4,000 போட்டோக்களை எடுத்து அந்த முகத் தோற்றம் கொண்ட அலைகளை பதிவு செய்திருக்கிறார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருக்கும் இயன், “அலைகளில் முகங்கள். இது தண்ணீரின் கடவுளாகவும் இருக்கலாம் அல்லது நம் அன்புக்குரிய ராணி எலிசபெத்தாகவும் இருக்கலாம்” என கேப்ஷனிட்டுள்ளார். இந்த முகத்தோற்றம் கொண்ட கடல் அலைகளின் போட்டோக்களை கண்ட இணைய வாசிகள் கமெண்ட் செக்‌ஷனில் படையெடுத்து தத்தம் வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள். அதில், சிலர் நம்பவே முடியாத அளவுக்கு தத்ரூபமாக இருக்கிறது என்றெல்லாம் பதிவிட்டிருக்கிறார்கள். அதேவேளையில், கண்டிப்பாக எடிட் செய்யப்பட்ட போட்டோவாக இருக்கும் என்றும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

புகைப்படத்தைக் காண: https://www.instagram.com/p/CpK5PB9IUT3/?utm_source=ig_web_copy_link

Chella

Next Post

குடிகார கணவனுக்கு 20 தூக்க மாத்திரை..!! துண்டு துண்டாக வெட்டி உடலை புதரில் வீசிய 5-வது மனைவி..!!

Fri Mar 3 , 2023
மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் பிறப்புறுப்புகள் வெட்டப்பட்ட நிலையில், ஆண் சடலம் ஒன்றை காவல்துறையினர் கண்டெடுத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்தது பிரேந்தர் குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால், போலீசாருக்கு எந்தவிதமான துப்பும் கிடைக்கவில்லை. இதனால், பிரேந்தர் குர்ஜார் மனைவி காஞ்சன் குர்ஜாரின் நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பிறகு […]

You May Like