புதுச்சேரியில் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தற்போது BF.7 வகை கொரோனா வைரஸ்-ன் தாக்கம் வேகம் எடுத்துள்ளது. சீன மட்டும் இல்லாமல் தென்கொரிய ஜப்பான் போன்ற பல நாடுகளில் இந்த BF.7 வகை கொரோனா அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் அதனுடைய பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதிக இழப்பு இல்லை. இந்த புதிய வகை கொரோனா பரவலை தடுக்க விமனநிலையத்தில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர்.
இந்நிலையில் தற்போது பண்டிகை காலங்கள் வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என புதுச்சேரி அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி மக்கள் அனைவரும் அனைத்து பொது இடங்கள் கடற்கரை சாலைகள் பூங்காக்கள் மற்றும் திரையரங்குகளில் கண்டிப்பாக மிகவும் கவசம் அணிந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். எதிர்வரும் புது வருட கொண்டாட்டங்களுக்கு இரவு 1மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள், ஹோட்டல்கள், பார்கள், மதுபான கடைகள், விருந்தோம்பல் மற்றும் கேளிக்கை துறை நிறுவனங்கள் தடுப்பு உரிய நிகழ்வுகளை பின்பற்றி தங்களின் வழக்கமான நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் தங்களின் அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிவது மட்டுமல்லாது, இரண்டு தவணை தடுப்பூசிபோட்டுள்ளனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து கல்வி நிறுவனங்களும் கோவிட் 19 தடுப்புக்குரிய நடைமுறைகளின் படி செயல்பட வேண்டும் மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் போது அனைத்து மாணவர்களும் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். அனைத்து தனியார் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களும் தங்களின் சராசரி நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் 100% தடுப்பூசி போட்டுள்ளனரா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அணித்தது வெளிப்பாடு தளங்களிலும் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி செயல் பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.