முகசிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமிடான்யா வெள்ளிக்கிழமை வீடு திரும்பவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த வீராபுரத்தில் பெற்றோருடன் வசித்து வருகின்றார் 9 வயது சிறுமியான டான்யா. இவருக்கு அரியவகை முகச்சிதைவு நோய் இருந்தது. இதனால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தார். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு வசதியில்லை. இதுபற்றிய தகவல் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சிறப்பு மருத்துவக்குழுவை அரசு அனுப்பி வைத்தது. சிறுமியை சோதித்த பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவும் தேவையான உதவிகளை அரசு மேற்கொண்டது.

ஆகஸ்ட் 23ம் தேதி ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டான்யா வரும் வெள்ளிக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளார். அரசு தரப்பினர் முழு உதவிகளையும் டான்யா குடும்பத்திற்கு செய்து வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
டான்யாவை கடந்த வாரம் நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸடாலின் நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.