fbpx

ஃபேஸ்புக் : விரைவில் 12,000 பேர் பணி நீக்கம் …

ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மீட்டா கிட்டத்தட்ட12000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு பணி நியமனம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தியது. இது தொடர்பாக நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தகவல் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தது 12,000 பேரை நீக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனினும் பணிஅமர்த்தியதை நிறுத்திய முதல் நிறுவனம் ஃபேஸ்புக் அல்ல. இதற்கு முன்பே சில நிறுவனங்கள் பணிஅமர்த்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இது குறித்து ஊழியர்கள் அறிவிப்பில் ’’ ஃபேஸ்புக் நிறுவனம் சத்தமின்றி பணிநீக்கம் செய்ய உள்ளது. ஆயிக்கணக்கானோர் இதனால் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. இதுவரை எந்த குறிப்பிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருந்தாலும் நிறுவனத்தில் குறைந்த செயலாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. 15 சதவீதம் பேர் இதில் பணி நீக்கம் செய்ய உள்ளனர் ரகசிய அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. சில மூத்த நிர்வாகிகள் பணி நீக்கம் செய்யும் நோக்கத்தில் செயல்படுவதாகவும் கூறப்படுகின்றது. அவர்களே பணியை விட்டு செல்வது போல வெளியில் காட்டிக்கொண்டாலும் நிறுவனம் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுகின்றார்கள் என தெரிவித்துள்ளனர்.

இது ஊழியர்களுக்கு அதிர்ச்சியாக இருக்க கூடாது. நிறுவனம் பணியமர்த்தலை உறுதிப்படுத்தியோதே பணி நீக்கங்கள் தொடர்பான குறிப்பும் உணர்த்தப்பட்டுள்ளதை ஊழியர்கள் சந்தேகித்தனர். சமீபத்தில் மீட்டா தலைவர் பணி நீக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார். படிப்படியாக எண்ணிக்கையை குறைக்கும் திட்டம் உள்ளதாக கூறினார். பல அணிகளில் ஆட்குறைப்புசெய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

பொருளாதார மந்த நிலையில் செலவினத்தைக் குறைக்க இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக கூறப்படுகின்றது. சில ஊழியர்களை நிறுவனத்தின் விதிமுறைப்படி 30 முதல் 60 நாட்கள் நோட்டீஸ் பட்டியலில் சேர்த்துள்ளது. அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொழில்நுட்ப உலகில் பணி நீக்கங்களுக்கு மத்தியில் அடுத்த ஆண்டில் பணியாளர்களின் எண்ணிக்கையை சீராக குறைப்பதே நிறுவனத்தின் திட்டம் எனவும் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இதனிடையே கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை பணியாளர்கள் தங்கள் 100 சதவீதம் உழைப்பை ஊழியர்கள் தர வேண்டும் எனவும் அதிகமான உற்பத்திக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆப்பிள் , கூகுள் போன்ற நிறுவனங்கள் இது போல அறிவித்திருப்பது ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் இந்தியா!

Thu Oct 6 , 2022
இந்த மாதம் 36 செயற்கைகோள்களை எல்விஎம் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜியோசின்க்ரோனஸ் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இது வெற்றிகரமாக சோதனைக்கு உள்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஜிஎஸ்எல்வி எம்.கே.3 என்பது 3ம் நிலை ஏவுகணை […]

You May Like