fbpx

ஃபேக்டரி ஊழியரை கடத்தி விடிய விடிய பலாத்காரம்..!! கண்ணை கட்டி காட்டுக்குள் தவிக்கவிட்ட 4 பெண்கள்..!!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், 4 பெண்கள் கூடி ஒரு நபரை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சிகர சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

இதுதொடர்பாக புகார் எதுவும் கொடுத்திராத அந்த பாதிக்கப்பட்ட நபர், உள்ளூர் ஊடகத்திடம் பேசியிருக்கிறார். அதில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த அந்த நபர் திருமணமாகி குழந்தையுடன் வசித்து வருகிறார். தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் அவர், கடந்த திங்களன்று வேலை முடிந்து வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த போது வெள்ளை காரில் வந்த 20 வயது மதிக்கத்தக்க நான்கு பெண்கள் தன் மீது ஏதோ ஸ்பிரே அடித்து கடத்தியதாக கூறியிருக்கிறார். கடத்தியதும், அருகே இருந்த ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனத்துக்குள் அழைத்துச் சென்று அங்கு வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த நபர் தெரிவித்திருக்கிறார்.

ஃபேக்டரி ஊழியரை கடத்தி விடிய விடிய பலாத்காரம்..!! கண்ணை கட்டி காட்டுக்குள் தவிக்கவிட்ட 4 பெண்கள்..!!

முகவரி கேட்பது போல ஒரு சீட்டை காட்டிய அந்த பெண்கள், தன் கண் மீது ஸ்பிரே அடித்ததாகவும், நினைவு தெரிந்த பிறகு கண்ணை கட்டி கூட்டிச் சென்றதாகவும் கூறிய அந்த நபர், காட்டுக்குள் அழைத்துச் சென்ற போது, அங்கு வைத்து தனக்கு மதுபானம் கொடுத்ததோடு அவர்களும் மது குடித்ததாகவும் கூறியிருக்கிறார். தன்னை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு அதிகாலை மூன்று மணியளவில் கண்ணை கட்டியபடி காட்டுக்குள்ளேயே விட்டுச் சென்றுவிட்டார்கள். அந்த 4 பெண்களும் அவர்களுக்குள் ஆங்கிலத்திலும் தன்னிடம் பஞ்சாபியிலும் பேசியதாக கூறியுள்ள அந்த நபர், போலீசிடம் புகாரளிக்கலாம் என்ற போது என் மனைவி பயந்து போய் வேண்டாம் என்று கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

ஃபேக்டரி ஊழியரை கடத்தி விடிய விடிய பலாத்காரம்..!! கண்ணை கட்டி காட்டுக்குள் தவிக்கவிட்ட 4 பெண்கள்..!!

இந்நிலையில், பெண்கள் நால்வர் ஒரு ஆணை பலவந்தமாக கடத்தி பாலியல் கொடுமை செய்த விவகாரம் ஊடகங்கள் மூலம் அம்பலமானதை அடுத்து பஞ்சாப் உளவுத்துறை விசாரணையை தொடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஒரு வயது குழந்தைக்கு ஏற்ற சத்தான உணவு..! 

Thu Nov 24 , 2022
குழந்தைகளுக்கு என்ன என்ன உணவுகளை அளிக்கலாம் என்பதில் பலருக்கும் ஐயம் இருந்து வருகின்ற நிலையில் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  குழந்தைக்கு தினமும் சத்துள்ள உணவினை அளிப்பது முக்கியமான ஒன்று. இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரத்தில் கஞ்சி செய்து கொடுப்பது பலன் தரும். அவ்வாறு குடுக்கும் கஞ்சில் சத்து இருக்கும்படி பார்த்துக்கொண்டாலே போதும். வீட்டிலேயே செய்யப்படும் கஞ்சி மாவானால் சிறப்பான ஒன்றாகும். இதனை தொடர்ந்து சத்து […]
குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் போது பெற்றோர்கள் செய்யும் தவறுகள் என்ன தெரியுமா? இனி இப்படி செய்யாதீங்க...!

You May Like