fbpx

இதை செய்யத் தவறினால் ஆகஸ்ட் 31க்குப் பிறகு வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்..

கடந்த பல மாதங்களாக, பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு KYC புதுப்பிக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. KYC-ஐ அப்டேட் செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் வங்கி வசதிகளின் பலன்களை எளிதாகப் பெறுவதுடன், வங்கிகளும் தங்கள் வங்கிச் செயல்பாடுகளை எளிதாகக் கண்காணிக்க முடியும். KYC செயல்முறையை அப்டேட் செய்வதன் மூலம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு மற்றும் அது தொடர்பான பிற சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது.

அந்த வகையில் பொதுத்துறை பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு KYCஐ அப்டேட் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்கள் KYCஐ விரைவில் புதுப்பிக்குமாறு வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிஎன்பி வங்கி “ ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அனைத்து வாடிக்கையாளர்களும் KYC ஐ அப்டேட் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் “ ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் மார்ச் 31, 2022க்குள் KYC கட்டாயமாகும்.. KYC இல்லாமல் கணக்கைப் பயன்படுத்த ஆகஸ்ட் 31 கடைசி நாளாகும். இந்தத் தேதிக்குப் பிறகு, KYC-ஐ அப்டேட் செய்த வாடிக்கையாளர்கள் மட்டுமே எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வங்கிச் சேவைகளைப் பெற முடியும்.

எனினும் நிறைய பேர் தங்கள் பான் அல்லது ஆதார் விவரங்களைக் கேட்டு KYC தொடர்பாக அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ்களைப் பெறுகின்றனர். இந்த மோசடிகளில் சிக்க வேண்டாம் என்றும் வங்கி எச்சரித்துள்ளது… உள்ளூர் கிளைக்குச் சென்று, பான் மற்றும் ஆதார் விவரங்களைக் கேட்கும் KYC படிவத்தை நிரப்புவதன் மூலம் மட்டுமே உங்கள் கணக்கிற்கு KYC-ஐ அப்டேட் செய்ய முடியும்.

எப்படி KYC-ஐ அப்டேட் செய்வது..? PNB கணக்கு தொடர்பான தகவல்களை புதுப்பிக்க, நீங்கள் KYC படிவத்தை பூர்த்தி செய்து வங்கியில் சமர்ப்பிக்கலாம்.. வங்கிக் கிளைக்குச் சென்று KYC தொடர்பான தகவல்களை நீங்கள் வழங்க வேண்டும்.. நீங்கள் உங்கள் வீட்டில் KYC செய்யலாம். பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடியுடன் உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு பான் கார்டு அல்லது ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை அனுப்ப வேண்டும். அல்லது நீங்கள் வங்கி அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று KYC க்கு தேவையான விவரங்களை வழங்கலாம்.

Maha

Next Post

நாளை தான் கடைசி நாள்.. ரூ.2000 பெற விவசாயிகள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்...

Tue Aug 30 , 2022
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பலன் தகுதியான விவசாயிகளுக்கு […]

You May Like