fbpx

அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்கள்!… 8 பேர் உயிரிழப்பு!… டெல்லி அகர்வால் மருத்துவ மையத்திற்கு நோட்டீஸ்!

எந்தப் பட்டமும் இல்லாமல் நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்ததாக 3 போலி மருத்துவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்த நிலையில், அகர்வால் மருத்துவ மையத்தின் பதிவை ரத்து செய்ய டெல்லி சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தெற்கு டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் மருத்துவர் நீரஜ் அகர்வால் என்பவர் அகர்வால் மருத்துவ மையம் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் சாதாரண மருத்துவர். அறுவை சிகிச்சை நிபுணர் அல்ல. ஆனால், போலி ஆவணங்களை வைத்துக் கொண்டு இவர் தனதுமருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.

இவரது மருத்துவமனையில் அஷ்கர் அலி என்பவர் பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக கடந்தாண்டு அனுமதிக்கப்பட்டார். இவருக்கு தகுதி பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஜஸ்ப்ரீத்சிங் அறுவை சிகிச்சை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர் நீரஜ் அகர்வால் அவரது மனைவி பூஜா, லேப் டெக்னீஷியன் மகேந்திர சிங் ஆகியோர் சேர்ந்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சைக்குப்பின் அஷ்கர் அலி கடும் வலியால் துடித்துள்ளார். இதனால் அவர் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், அவர் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டார். இங்கு போலி மருத்துவர்கள், தவறான முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதாக அஷ்கர் அலி உறவினர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து 4 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ வாரியம் அகர்வால் மருத்துவ மையத்தில் கடந்த 1-ம் தேதி ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வு அறிக்கையின்படி, கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து மருத்துவர் அகர்வாலுக்கு எதிராக 9 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. மருத்துவ கவனக்குறைவு காரணமாக, இதுவரை 7 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். போலி ஆவணங்களை வைத்துக்கொண்டு மருத்துவர் நீரஜ் அகர்வால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மருத்துவரின் கையெழுத்து மட்டும்அடங்கிய 414 வெற்று மருந்துசீட்டுகளும் அவரது மருத்துவமனையில் கைப்பற்றப்பட்டன. இங்கு கருக்கலைப்பு செய்தவர்களின் விவரங்கள் அடங்கிய இரண்டு பதிவேடுகளும் கைப்பற்றப்பட்டன.

தடை செய்யப்பட்ட மருந்துகள், ஊசிகள் ஆகியவற்றை இவர்கள் இருப்பில் வைத்திருந்தனர். காலவதியான அறுவை சிகிச்சை உபகரணங்கள், 47 வங்கிகளின் காசோலைகள், 54 ஏடிஎம் கார்டுகள், தபால்அலுவலக சேமிப்பு கணக்கு புத்தகங்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் கட்டணம் வசூலிக்கும் 6 பிஓஎஸ் இயந்திரங்கள் ஆகியவை நீரஜ் அகர்வாலின் வீடு மற்றும் மருத்துவமனையில் கைப்பற்றப்பட்டன. கடைசியாக 2 நோயாளிகள் இறந்தது தொடர்பாக மருத்துவர் நீரஜ்அகர்வால், அவரது மனைவி பூஜா, மருத்துவர் ஜஸ்ப்ரீத் சிங், லேப் டெக்னீஷியன் மகேந்திர சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்தநிலையில், அகர்வால் மருத்துவ மையத்தின் பதிவை ரத்து செய்ய டெல்லி சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Kokila

Next Post

தனுஷ் மகன் மீது பாயும் நடவடிக்கை..!! வீடியோ வைரலானதை அடுத்து வந்த சிக்கல்..!!

Sat Nov 18 , 2023
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் காதல் திருமணம் நடந்தது. கடந்த ஒரு வருடமாக தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். பள்ளிப்படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வது, இருவரும் பிள்ளைகளுடன் தனியாக நேரம் செலவிடுவது என இவர்களது பெற்றோர்கள் நன்கு கவனித்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்னும் 18 வயது நிரம்பாத தனுஷின் மூத்த […]

You May Like