fbpx

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த கள்ளக்காதல்..!! தனி வீடு எடுத்து குடித்தனம்..!! அவளுக்கு வேற விஷயம் தெரிஞ்சிருச்சே..!! கால்வாயில் மிதந்த உடல்..!!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், இவரது மனைவி இலக்கியா (31). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், வெங்கடேஷுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் திருப்பூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், இந்த விஷயம் எப்படியோ மனைவி இலக்கியாவுக்கு தெரிந்துவிட்டது. இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை வெடித்துள்ளது.

இதனால் கோபமடைந்த இலக்கியா, சிறுகனூரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். சம்பவத்தன்று கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற இலக்கியா நீண்ட நேரமாக வீடு திரும்பாததால், பதற்றமடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, ​​இலக்கியாவின் உடல் அவர்களின் வீட்டின் அருகே உள்ள கால்வாயில் மிதப்பது தெரியவந்தது. அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால், அதிர்ந்துபோன பெற்றோர், உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர், அங்கு வந்த போலீசார் இலக்கியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் கணவர் வெங்கடேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில், “இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணுடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனால், என்னுடைய மனைவி இலக்கியா சண்டையிட்டார். இதனால், அவர் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றார்.

நான் நேரில் சென்று சமாதானம் செய்ய முயன்றேன். ஆனால், சமாதானப்படுத்தவில்லை. இதனால், அவரை கொலை செய்ய முடிவு செய்து, இலக்கியாவை அழைத்து, “தனியாக வா, நான் பேச விரும்புகிறேன்” என்றேன். பின்னர், சிறுகனூர் அருகே உள்ள ஒரு கால்வாயில் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர், என்னிடம் பேசிய பிறகு, அவள் தன் தாய் வீட்டிற்குச் சென்றாள். அவள் நடந்து செல்லும்போது, ​​இலக்கியாவை ஒரு துணியால் கழுத்தை நெரித்து கொன்று, அங்குள்ள கால்வாயில் உடலை வீசினேன்” என்றார். இதையடுத்து, கணவர் வெங்கடேஷை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Read More : திக் திக் நிமிடங்கள்..!! உலக சாம்பியனை தோற்கடித்த பிரக்ஞானந்தா..!! புதிய மைல்கல் படைத்து சாதனை..!!

English Summary

As she walked away, I strangled Ilakiya with a cloth and threw her body into the canal there.

Chella

Next Post

மாதம் ரூ.62,000 சம்பளம்..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் போதும்..!! சென்னை மெட்ரோ நிர்வாகத்தில் வேலை..!!

Mon Feb 3 , 2025
An employment notification has been issued to fill vacant posts in the Chennai Metro Administration.

You May Like