fbpx

தாயுடன் கள்ளக்காதல்..!! கண்டித்த மகன்கள்..!! காதில் போட்டுக் கொள்ளாததால் ஆத்திரம்..!! குடல்களை வெளியே எடுத்து தூக்கி வீசிய சகோதரர்கள்..!!

தனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை மகன்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர்கள் சகோதரர்களான சஞ்சய் (27) மற்றும் ஜெயஸ் தாக்கூர் (23). இவர்களின் தந்தை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், தங்களது தாயாருடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தங்களது தாயுடன் ரத்தன்ஜி தாக்கூர் என்பவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார்.

இந்த விவகாரம் இரண்டு மகன்களுக்கு தெரியவந்தது. இதனால், தனது தாயாரையும், ரத்தன்ஜியையும் பலமுறை எச்சரித்து வந்துள்ளனர். ஆனால், இருவருமே அதை கண்டுகொள்ளாமல், தங்களது கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சகோதரர்கள் ரத்தன்ஜியின் வீட்டிற்குச் சென்று அவரைக் கத்தி மற்றும் கட்டையால் சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர்.

இதனால், அவரது குடல்கள் வெளியே வந்தன. இதில், அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால், கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், ரத்தன்ஜியின் குடல்களை வெளியே எடுத்து வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தன்ஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : Central Bank Of India-வில் 1,000 காலியிடங்கள்..!! மாதம் ரூ.86,000 வரை சம்பளம்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

English Summary

The incident of a man being hacked to death by his sons for having an illicit relationship with his mother has caused great shock.

Chella

Next Post

வெயிட் லாஸ் மட்டும் இல்ல.. இந்த ஒரு காயை தினமும் சாப்பிட்டால் பல பிரச்சனைகள் தீரும்...

Fri Jan 31 , 2025
Eating Bottle Gourd also has many other amazing benefits.

You May Like