உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த ஒரு குடும்பம், வரதட்சணைக் கேட்டு தங்களது மருமகளை நிர்வாணப்படுத்தியும், பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு வைர வியாபாரியுடன் திருமணம் நடந்துள்ளது. அப்போது, வரதட்சணையாக ரூ.10 லட்சம் ரொக்கமும், ஒரு சொகுசு காரும் மாப்பிள்ளை வீட்டார் கேட்டுள்ளனர். இதனால், பெண்ணின் தந்தை ரூ.50 லட்சத்தை வரதட்சணையாக கொடுத்துள்ளார்.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு இருவருக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதன் பிறகு தான் வரதட்சணை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில், “திருமணத்தின்போது எனது தந்தை ரூ.50 லட்சம் பணம் மற்றும் பிற பொருட்களை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, எனது கணவர் அவரது உறவினர்களின் தூண்டுதலால் என்னை தொடர்ந்து அடிக்கத் தொடங்கினார். குடித்துவிட்டு தினமும் என்னை அடிப்பார்.
அதேபோல, இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபடும்படி, என்னை கட்டாயப்படுத்துவார். பிப்ரவரி 2ஆம் தேதி எங்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அதன் பிறகு நிலைமை மிகவும் மோசமானது. என் மாமியார் கூடுதலாக ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்தார். ஆனால், என் தந்தையால் ரூ.3 லட்சம் மட்டுமே கொடுக்க முடிந்தது.
இதையடுத்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால், இனியும் என்னால் தாங்க முடியாது என்று நினைத்தேன். இதுகுறித்து எனது சகோதரனிடம் கூறினேன்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்த புகாரின் பேரில், பெண்ணின் கணவர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : காதலி உள்பட 5 பேரை கொடூரமாக கொன்ற 23 வயது இளைஞர்..!! என்ன காரணம்..? விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!