பரியேறும் பெருமாள், காலா, பிசாசு போன்ற படங்களில் நடத்தவர் சுப்பிரமணி. திரையுலகில் அவரை பலரும் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைப்பார்கள். பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸுடன் பணியாற்றியதால் ‘சூப்பர் குட் சுப்பிரமணி’ என அழைக்கப்படுகிறார். மேலும் தமிழ் திரைத்துறையில் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் பணி புரிந்தார். எப்படியாவது இயக்குநராகிவிட வேண்டும் என்பதில் மிக தீவிரமாக இருந்த சுப்பிரமணிக்கு கடைசிவரை இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இயக்குநராக வெல்ல முடியவில்லை நடிகராக பெயர் எடுக்க வேண்டும் என்று மிக தீவிரமாக உழைத்த அவர் காலா, பரியேறும் பெருமாள், பிசாசு, ஜெய் பீம், வானம் கொட்டட்டும், ஹீரோ, அருவம், மகாமுனி, கூர்கா, இரும்பு திரை, ரஜினி முருகன், அழகர்சாமியின் குதிரை என ஏகப்பட்ட படங்களில் நடித்தார்.
அவரது நடிப்பில் கடைசியாக பரமன் திரைப்படம் வெளியானது. இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் நான்காம் கட்ட புற்றுநோயோடு கடுமையான நிதி நெருக்கடியுடன் போராடிவருகிறார். அதுமட்டுமின்றி அவருக்கு பலரும் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் அவருக்கு திரைத்துறையினர் உதவ வேண்டும் என்று குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.