நடிகர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான நாசரின் தந்தை மெஹபூப் பாஷா இன்று காலமானார். செங்கல்பட்டு மாவட்டம், தட்டான்மலையில் வசித்து வரும் இவர் வயது மூப்பு காரணமாக தனது வீட்டிலையே இன்று காலமானார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நகைகளைப் பாலிஷ் செய்து வந்த மெகபூப் பாஷா தனது மகனை ஒரு நடிகனாக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். தந்தையின் வற்புறுத்தலுக்காக நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்த நாசர்,அதன் பின்னர், நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வேலைக்குச் சென்றார். அவர் சினிமாத் துறையில் ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணிய தந்தைக்கு நாசர் வேறு இடத்தில் வேலை செய்வது பிடிக்கவில்லை, மீண்டும் தந்தையின் கட்டாயத்தால் நடிக்க வாய்ப்பு தேடி சென்றார்.
இயக்குனர் இமயம் கே. பாலச்சந்தரின் கல்யாண அகத்திகள் (1985) திரைப்படத்தில் இரண்டாம் நிலை துணை வேடத்தில் நடித்ததன் மூலம் நாசர் நடிகராக அறிமுகமானார். அதனப்பிறகு ஹீரோ வில்லன் குணச்சித்திர நடிகர் என பன்முகம் திறன் கொண்டவராக விளங்கினார். நாசர் ஒரு நடிகராக வருவதற்கு ஆணி வேறாக இருந்தது தந்தை மெகபூப் பாஷாவின் கனவு தான். நடிகர் நாசரின் தந்தை மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.