தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பிரபல நடிகரின் மகன் 5 பதக்கங்களை குவித்து அசத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா 2023 தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், மகாராஷ்டிர அணி சார்பில் பங்கேற்றார். அதில் 100 மீ, 200 மீ மற்றும் 1500 மீட்டர் பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 400 மற்றும் 800 மீட்டர் பிரிவில் வேதாந்திற்கு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மகனின் வெற்றியை நடிகர் மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடவுள் அருளால் பதக்கம் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
17 வயதாகும் வேதாந்த், டேனிஷ் ஓபன் சர்வதேச நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு 6 மாதங்கள் துபாயில் பயிற்சி அளிக்கப்பட்டது. கேலோ இந்தியா நீச்சல் போட்டியில் அபெக்சா பெர்னான்ஸ் 6 தங்கம், 1 வெள்ளி பதக்கத்தையும், வேதாந்த் 3 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.