fbpx

பிரபல நடிகரின் மனைவி திடீர் மரணம்..!! சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்..!! திரையுலகினர் இரங்கல்..!!

கன்னட திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய ராகவேந்திரா. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளார். கடந்த 2007இல் போலீஸ் அதிகாரி சிவராம் என்பவரின் மகளான ஸ்பந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சவுர்யா என்ற மகன் உள்ளார். விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வா என்கிற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த விஜய ராகவேந்திரா, சில நாட்கள் குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக தன் மனைவி மற்றும் மகன் உடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுற்றுலா போன இடத்தில் பிரபல நடிகரின் மனைவி மரணமடைந்த சம்பவம் கன்னட திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பந்தனாவின் உடலை இந்தியா கொண்டுவர அவரது குடும்பத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மனைவியை இழந்து வாடும் நடிகர் விஜய ராகவேந்திராவுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். ஸ்பந்தனாவின் உடல் செவ்வாய்க்கிழமை இந்தியா கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது..

Chella

Next Post

ஐபோன் 15 வெளியீடு தேதிகள் அறிவிப்பு..!

Mon Aug 7 , 2023
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் இரு வாரங்களில் தனது புது பிராடக்ட்களை வெளியிடுவதை ஆப்பிள் நிறுவனம் வழக்கமாக வைத்துள்ளது. அதே போல இந்த ஆண்டும், செப்டம்பர் 12 அல்லது 13ம் தேதிகளில் புதிய ஆப்பிள் பிராடக்ட்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை ஆப்பிள் ஐபோன் 15ல் எதிர்பார்க்கப்படும் ஃபீச்சர்கள், அனைத்து மாடல்களிலும் டைனமிக் ஐலாண்ட்,Periscope Zoom Lens, USB C போர்ட், Telescope Lens, Silence Buttonக்கு […]
ஐபோனை இவ்வளவு குறைந்த விலைக்கு வாங்க முடியுமா..? ரூ.12 ஆயிரம் வரை சலுகை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

You May Like