80ஸ், 90ஸ்-க்களில் கொடிகட்டி பிறந்தவர் குஷ்பூ, அந்த காலகட்டத்தில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டப்பட்டது என்றால் அது இவருக்கு தான், அந்த அளவுக்கு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். பிறகு இவர் இயக்குனர் சுந்தர் சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். தற்போது திரைப்படத்தில் அதிகம் கவனம் செலுத்தவில்லை என்றாலும் சீரியல், அரசியல் என பிஸியாகவே இருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை குஷ்பூ தனது அண்ணனுக்கு உடல் நிலை சரியில்லை, நான்கு நாட்களாக வென்டிலேட்டரில் வைத்திருப்பதாகவும், அவர் விரைவில் குணமாகி வர பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இவரின் அண்ணா குணமடைய வேண்டி பலரும் தங்களது பிரார்த்தனைகளைத் தெரிவித்து வந்திருந்தனர். ஆயினும் கடந்த 4நாட்களாக இவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தான் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக இன்றைய தினம் குஷ்பூவின் அண்ணன் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டிருந்தா குஷ்பூ “உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரம் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் நமக்கு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது. நிம்மதியாக இருங்கள் அண்ணா” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தினமும் உங்களை மிஸ் செய்வேன் அண்ணா. இறுதியாக நீங்கள் நிம்மதியாக இருக்கிறீர்கள். நன்றாக ஓய்வெடுங்கள். என்று வருத்தத்தோடு பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து திரைப்பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் உட்படப் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.