பிரபல கவர்ச்சி நடிகை களில் ஒருவர் சோனா. 14 வயதிலேயே சினிமாவுக்கு வந்த இவர், தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் குமாரின் பூவெல்லாம் உன்வாசம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் பதிவாக உருவாகும் ‘ஸ்மோக்’ என்கிற வெப் சீரிஸ் மூலமாக அவர் தனது இயக்குநர் பயணத்தையும் துவங்கியுள்ளார். .
ஷார்ட் பிலிம்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இதில், முகேஷ் கன்னா, ஆஸ்தா அபே, இளவரசு, ஜீவா ரவி என பலர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடருக்கு எதிராக பலர் கடுமையான எச்சரிக்கை விடுத்ததாகவும் பல அவமானங்களை சந்தித்ததாகவும் சோனா தெரிவித்துள்ளார். மேலும், கவர்ச்சி நடிகை என்ற பெயரை மாற்ற ஆசைப்பட்டு தான் நான் இதை இயக்கினேன் என்றார்.
மேலும் அவர் கூறும் போது, “எது சரி தவறு என்று எனக்கு தெரியாது. ஒருநாள் வயதான கிழவன் என்னிடம் டபுள் மீனிங்கில் பேசி சிரித்தார். அதே சமயம், என் அப்பா மாதிரி ஒரு மோசமான மனிதரை பார்த்தது இல்லை. தினமும் ஒரு பெண்ணுடன் உறவு வைத்திருப்பார். பெண்கள் என்றாலே உடலுறவு கொள்ளக்கூடிய ஒரு பொருளாகத்தான் அவர் பார்ப்பார்.
அது மட்டும் இல்லாமல், அவர் தன்னை மகள் என்று கூட பார்க்காமல், சிறுவயதிலிருந்தே “மோசமானவள்”, “ரொம்ப கெட்ட பொண்ணு”, “கேரக்டர் சரியில்லை” என்று எப்போதும் விமர்சிப்பார். இது எனது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்று கூறினார். மேலும், தனது தந்தையின் இந்த கடுமையான வார்த்தைகள் தனது மனதை ஆழமாக காயப்படுத்தியது மட்டுமல்லாமல், தனது எதிர்கால பாதையையே மாற்றியது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், எனது ஹன்தை தினமும் ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததால், என் அம்மா மிகவும் சிரமப்பட்டார். ஒரு கட்டத்தில் அவர் எங்களை விட்டு சென்றதும், நான் அம்மாவுக்காகவே வாழ வேண்டிய கட்டாயம் இருந்தது. மேலும், “சினிமாவில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் உள்ளது.
அப்படி என்னை பலரும் அழைத்தார்கள். அப்போது நான் அவர்களை அறைந்து இருக்கிறேன். சினிமாவில் கவர்ச்சியாக நடித்தாலும் எனக்கு திருமணம் ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் யாரும் எண்ணெய் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லவில்லை, என்னை வைத்துக்கொள்கிறேன் என்று தான் சொன்னார்கள். இதனால் தான் எனக்கு திருமணம் ஆகவில்லை.
பார்ட்டிகளுக்கு செல்லும் போது, பல முன்னணி நடிகர்கள் என்னிடம் தவறாக நடந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் தப்பித்து விடுகிறார்கள், ஆனால் நான் மட்டும் பலி ஆடாகி இருக்கிறேன். எனக்கு ஒரு ஆண் நண்பர் இருக்கிறார். அவர் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். ஆனால் எனக்கு அவர் மீது காதல் இல்லை. நான் தனியாக சந்தோஷமாக வாழ்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Read more: “பொண்ணுங்க அதிகமா லவ் பண்ணுனா அந்த லவ் நிலைக்காது” பிரேக் அப் குறித்து மனம் திறந்து பேசிய சிவாங்கி..