‘சைத்தான்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை அருந்ததி நாயர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
’பொங்கி எழு மனோகரா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அருந்ததி நாயர். இவர், ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’, ’சைத்தான்’, ’கன்னி ராசி’, ’பிஸ்தா’ ’ஆயிரம் பொற்காசுகள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அருந்ததி தன்னுடைய சகோதரருடன் பைக்கில் சென்னை – கோவளம் கடற்கரை சாலையில் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனமொன்று பைக்கின் மீது மோதிவிட்டு சென்றுள்ளது.
இதில் அருந்ததி நாயர் மற்றும் அவரது சகோதரர் இருவருக்கும் அடிபட்டுள்ளது. சோகம் என்னவென்றால் விபத்து நடந்து 1 மணி நேரத்திற்கு பிறகு தான், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் அருந்ததி நாயருக்கு பலத்த அடிபட்டுள்ளது. இதனால் ரத்தம் ஏராளமாக வெளியேற தற்போது தனியார் மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகை அருந்ததி நாயர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அருந்ததியின் சிகிச்சைக்கு நிதியுதவி கேட்டும் கோலிவுட்டில் இருந்து யாரும் உதவ முன்வரவில்லை என அருந்ததியின் தோழியும், மலையாள நடிகையுமான ரம்யா கண்ணீர் மல்க கூறியுள்ளார். மேலும், அருந்ததிக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More : சொத்து பத்திரத்தில் பிழையா..? அசால்ட்டா விட்றாதீங்க..!! மிகப்பெரிய சிக்கல்..!! உடனே இதை பண்ணுங்க..!!