கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க நகர தலைவரும், பிரபல தொழிலதிபருமான M.B. சுரேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. M.B. சுரேஷ், வெங்கடேஸ்வரா நகைக்கடை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.
இந்நிலையில், இவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சுரேஷின் உடலைக் கைப்பற்றி சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலில் நஷ்டமா..? அல்லது மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது யாரேனும் தூண்டுதலின் பேரில் இவ்வாறு நடந்ததா? என விசாரணை நடைபெறுகிறது.