fbpx

மேலும் 9,000 பேரை பணி நீக்கம் செய்ய பிரபல நிறுவனம் திட்டம்.. கலக்கத்தில் ஊழியர்கள்..

மேலும் 9,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது

கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. இதே போல் சமீபத்தில் ஜூம் நிறுவனம் 1,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.. அதே போல் 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக இண்டர்நெட் நிறுவனமான Yahoo அறிவித்தது..

இந்நிலையில் அடுத்த சில வாரங்களில் மேலும் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.. கடந்த சில ஆண்டுகளில் கணிசமான அளவு பணியாளர்களை சேர்த்துள்ளதாகவும், ஆனால் நிச்சயமற்ற பொருளாதாரம் மற்றும் அதிகரிக்கும் செலவு காரணமாக ஆட்குறைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனது.. அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில் “ நிச்சயமற்ற பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்தில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எங்கள் செலவுகள் மற்றும பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையை தேர்ந்தெடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்…

கடந்த வாரம், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இந்த ஆண்டு 10,000 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது.. முன்னதாக கடந்த ஜனவரியில், அமேசான் 18,000 பேரை பணியில் இருந்து நீக்கியது. இது அந்நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான பணிநீக்க நடவடிக்கை இதுவாகும்.. 2023-ம் ஆண்டில் தற்போது வரை மட்டும், 350 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

கவனம்..‌! வரும் 26-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்....! ஆன்லைனில் பதிவு செய்வது கட்டாயம்...!

Tue Mar 21 , 2023
சேலம்‌ மாவட்டத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ 26-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி வருகின்ற 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்காடு பிரதான சாலையில்‌ அமைந்துள்ள சி.எஸ்‌.ஐ பல்வகை தொழில்நுட்பக்‌ கல்லூரி வளாகத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெறவுள்ளது. இம்முகாமில்‌ உற்பத்தி, […]

You May Like