fbpx

பிரபல இயக்குனர் மரணம்…! திரையுலகினர் கவலை..!

பிரபல மலையாள இயக்குனர் சித்திக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் பிரபல இயக்குனர் சித்திக் வயது 65. 1989ஆம் ஆண்டு வெளியான ‘ராமோஜிராவ் ஸ்பீக்கிங்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து காட்ஃபாதர், வியட்நாம் காலனி, ஹிட்லர் உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். விஜய், சூர்யா நடிப்பில் காமெடிக்கு பேர்போன படம் என அறியப்படும் “ஃப்ரெண்ட்ஸ்” படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். தமிழில் மேலும் சாது மிரண்டா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினை காரணமாக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார் சித்திக். இவருக்கு நேற்றைய தினம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் சித்திக். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Kathir

Next Post

LEAVE: இன்று தமிழகத்தின் மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை..! உங்க மாவட்டமும் இருக்க..?

Wed Aug 9 , 2023
ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவில் அமைந்திருக்கும் திருவள்ளூர் மாவட்டத்திற்கும், ரத்தினகிரி முருகன் கோவில் அமைத்திருக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதே போல சேலம் மாவட்டத்திலும் அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. அம்மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா இன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழாவை காண தமிழ்நாடு […]

You May Like