பாலிவுட் இயக்குனர் சவான் குமார் தக் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்..
சவான் குமார் தக் ஏற்கனவே நுரையீரல் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார்.. இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு, இயக்குனர் நுரையீரல் கோளாறு காரணமாக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் உடல்நிலை மோசமானதால் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயம் சீராக செயல்படவில்லை என்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது..
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.. இதய செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அவரின் மறைவுக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்..
சௌதென், சனம் பெவாஃபா, ஹவாஸ், கோம்தி கே கினாரே, சாஜன் பினா சுஹாகன் போன்ற படங்களை சவான் குமார் தக் இயக்கி உள்ளார்.. மேலும் தான் இயக்கிய படங்களில் மிகவும் பிரபலமான சில பாடல்களை அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.