fbpx

பிரபல ஹாலிவுட் நடிகை லார் பார்க் லிங்கன் காலமானார்..!! – திரையுலகினர் இரங்கல்

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையும், டல்லாஸில் செயல்படும் ‘Actors Audition Studios’ எனும் நடிப்பு பயிற்சி நிறுவனத்தின் நிறுவனரும், அமெரிக்காவின் ஆடிஷன் பயிற்சியாளருமான லார் பார்க் லிங்கன், 63-வது வயதில் காலமானார்.

இது குறித்து அவரது நிறுவனமான Actors Audition Studios வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவரது 45 ஆண்டுகால கலைப்பயணத்தில், லார், தனது உற்சாகமான நடிப்பினாலும், ஆர்வமுள்ள புதிய நடிகர்களுக்கு வழிகாட்டியதன் மூலம் ஹாலிவுட்டில் ஒரு மறக்க முடியாத முத்திரையை பதித்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

லார் பார்க் லிங்கன் தனது காதலரான மைக்கேல் லிங்கனை 1981ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி 14 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்தது. ஆனால் 1995ம் ஆண்டு, புற்றுநோயால் மைக்கேல் லிங்கன் உயிரிழந்தார். அவரது மரணம், லாரின் வாழ்க்கையில் பேரிழப்பாகும். அதன் பிறகு லாரின் 2008 முதல் மார்பகப் புற்றுநோயுடன் போராடி வந்தார், 2012 வாக்கில், அவரது சிகிச்சையின் ஒரு பகுதியாக பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.

அவருக்கு மார்பக புற்று நோய் பாதிப்பு இருந்த போதிலும் மரணத்திற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. மிக பிராலமான friday the 13th மற்றும் knots landing போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார் லார். இவர் அதிகமாக பேய் படங்களிலும் தொடர்களிலும் நடித்துள்ளார்.

Read more: பஹல்காம் பயங்கரவாத சம்பவம்!. இந்தியாவில் PSL போட்டிகளை ஒளிபரப்பத் தடை!.

English Summary

Famous Hollywood actress Laura Park Lincoln passes away.

Next Post

Gold Rate: அதே தான்.. தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Fri Apr 25 , 2025
There is no change in the price of gold.

You May Like