பிரபல மலையாள இயக்குனர் அசோகன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60.
கேரள மாநிலம் வர்கலாவை பூர்வீகமாகக் கொண்ட அசோகன் மலையாளத்தில் நகைச்சுவை படங்களை இயக்கியதன் மிகவும் பிரபலமானவர். 80களில் மலையாள இயக்குனர் சசிகுமாரிடம் உதவியாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.. பின்னர் சுரேஷ் கோபி, ஜெயராம் மற்றும் ரஞ்சினி நடித்த வர்ணம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது இரண்டாவது படமான ஆச்சார்யன் அவரது திருப்புமுனையாக கருதப்பட்டது.
பின்னர் அவர் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான சந்த்ரம் என்ற படத்தை இயக்கி இருந்தார்.. அதைத் தொடர்ந்து 1991 இல் மூக்கிலா ராஜ்யத்து மற்றும் 1993 இல் ஆச்சார்யன் போன்ற படங்களையும் அவர் இயக்கினார்.. எழுத்தாளர்-இயக்குனர் தாஹாவுடன் இணைந்து அசோகன் பல படங்களில் பணியாற்றினார் .. அவர்கள் இருவரும் கூட்டாக இயக்கிய மூக்கிலா கித்யா மற்றும் சாண்ட்ராம் போன்ற வெற்றி படங்களுக்கு வழிவகுத்தது.
அதுமட்டுமல்லாமல், கைராளி தொலைக்காட்சிக்காக அவர் இயக்கிய கானப்புறம் என்ற டெலிஃபிலிம், 2003ல் சிறந்த டெலிபிலிம் என்ற மாநில அரசின் விருதை வென்றது. பிறகு சிங்கப்பூருக்குச் சென்று தொழிலில் கவனம் செலுத்தினார். வளைகுடா மற்றும் கொச்சியில் இயங்கி வரும் ஐடி நிறுவனமான ஓபரானின் நிர்வாக இயக்குநராக இருந்தார்.
இந்நிலையில் அசோகன் ஒரு மாதத்திற்கும் மேலாக பல உடல்நல பிரச்சினைகளுடன் போராடி வந்துள்ளார்.. சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து திரும்பிய அவர் கொச்சி லேக்ஷோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்த சூழலில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக கூறப்படுகிறது.
அவரது மரணத்தை கேரள இயக்குநர்கள் சங்கத்தின் திரைப்பட ஊழியர் சம்மேளனம் உறுதி செய்துள்ளது. பல்வேறு திரைப்பிரபலங்களும் அசோகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அசோகனின் இறுதிச் சடங்குகள் வர்கலையில் உள்ள அவரது சொந்த வீட்டில் இன்று நடைபெறவுள்ளது. இவருக்கு சீதா என்ற மனைவியும், அபிராமி என்ற மகளும் உள்ளனர்.