ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஜப்பானிய இசையமைப்பாளர் ருச்சி சகமோட்டோ (Ryuichi Sakamoto) இன்று காலமானார்..
ருச்சு சஜனீட்டீ பிரபல ஜப்பானிய இசையமைப்பாளர் ஆவார்.. இவர் ‘த லாஸ்ட் எம்பரர்’, ‘தி லிட்டில் புத்தா’, ‘த ரெவரன்ட்’ உட்பட பல ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ‘த லாஸ்ட் எம்பரர்’ படத்திற்காக இவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.. மேலும் அவர் ‘பாஃப்டா’ உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். ‘மெர்ரி கிறிஸ்துமஸ், மிஸ்டர் லாரன்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே அவருக்கு கடந்த 2014ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்ற அவர், அதில் இருந்து குணமடைந்தார்.. மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த வாரம் உயிரிழந்தார். அவருக்கு வயது 71. அவரின் உறவினர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..