fbpx

அடுத்தடுத்து சிக்கிய பிரபல தயாரிப்பாளர்கள்.. வருமான வரித்துறை அதிரடி சோதனை..

தமிழகத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களுக்கு கணக்கில் வராத கருப்புப் பணம் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலில் அடிப்படையில் தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.. அந்த வகையில் தமிழ் சினிமா துறையில் பிரபல பைனாஸ்சியராக உள்ள அன்புச்செழியனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது..

சென்னை, நுங்கம்பாக்கம் மற்றும் மதுரையில் உள்ள அன்புசெழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது..

இதைத்தொடர்ந்து பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. சென்னை தி.நகரில் உள்ள கலைப்புலி எஸ்.தானு அலுவலகத்தில் காலை 9 மணி முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது..

இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.. இதே போல் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.. சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்டோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது..

Maha

Next Post

தொடர்பை இழந்து விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்..! 6 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு..!

Tue Aug 2 , 2022
பாகிஸ்தானில் உயர் அதிகாரிகளுடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெல்லாவில் இருந்து உயர் அதிகாரிகளுடன் புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர், சில நிமிடங்களில் திடீரென மாயமானது. சுமார் 5 மணி நேரமாக தேடியும் ஹெலிகாப்டர் இருக்குமிடத்தின் சிக்னல் கிடைக்கவில்லை என்ற நிலையில், ஹெலிகாப்டரில் 6 காமாண்டர்கள் பயணித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. பலுசிஸ்தானில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு […]
தொடர்பை இழந்து விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்..! 6 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு..!

You May Like