fbpx

ரூ.200 கோடி வருமானத்தை மறைத்த பிரபல தயாரிப்பாளர்கள்.. வருமான வரித்துறை தகவல்..

தமிழகத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களுக்கு கணக்கில் வராத கருப்புப் பணம் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலில் அடிப்படையில் தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த 2-ம் தேதி முதல் 3 நாட்கள் சோதனை நடத்தினர். பிரபல பைனாஸ்சியராக உள்ள அன்புச்செழியன், பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஞானவேல் ராஜா, எஸ்.ஆர் பிரபு ஆகியோருக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்..

சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என மொத்தம் 40க்கும் மேற்பட்டோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது..சென்னை, மதுரை, கோவை, வேலூரில் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது..

இந்நிலையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியர்ன் உள்ளிட்டோரின் இடங்களில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.. கணக்கில் வராத ரூ.26 கோடி ரொக்கம், ரூ. 3 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. மேலும் அன்புச்செழியன் உள்ளிட்ட ரூ.200 கோடி வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது..

Maha

Next Post

மூணாறில் கனமழையால் நிலச்சரிவு; கோயில், கடைகள் மண்ணுக்கடியில் புதைந்த பயங்கரம்...!

Sat Aug 6 , 2022
கேரளாவில், முல்லைப் பெரியாறு அணை நேற்று திறக்கப்பட்டது. அணை அதன் கொள்ளளவை எட்டியதால் கேரளாவில் 20-க்கும் மேற்பட்ட அணைகள் திறக்கப்பட்டன. பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையால் இடுக்கி, கண்ணூர் போன்ற பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழைக்கு கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் 22 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து நேற்று இரவு 11.45 மணியளவில் இடுக்கியில் உள்ள மூணாறு அருகே குண்டலா புதுக்குடி பகுதியில் […]

You May Like