பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் ஊரன் அடிகளார் இன்று காலமானார். அவருக்கு வயது 89.
சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அற நிறுவனக் காவலர் முதலிய பன்முகங்களை கொண்டவர் ஊரன் அடிகள்… 1933-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் சமயபுரம் அர்ய்ஜே நரசிங்க மங்கலத்தில் ஊரன் அடிகள் பிறந்தார். 1955 முதல் ஸ்ரீரங்கம், வேலூர், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியற்றினார். தனது 22-ம் வயதில் “சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்” நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். துறவு மேற்கொண்டார். 23.5.1968 அன்று வடலூரே இவரது வாழ்விடமாக மாறியது. 1970 ஆம் ஆண்டு முதலாக வடலூரில் சன்மார்க்க நிலையங்களில் அறங்காவலராக தமது பணியைத் துவக்கி, 25 ஆண்டுகளுக்கும் மேலாக அருந் தொண்டாற்றியவர்.
வடலூர் வரலாறு, இராமலிங்கரும் தமிழும், பாடல்பெற்ற திருத்தலத்து இறைவன் இறைவி போற்றித் திருப்பெயர்கள், புள்ளிருக்கு வேளூரில் வள்ளலார், இராமலிங்க அடிகளின் சிதம்பர அனுபவங்கள் போன்ற பல நூல்களை அவர் எழுதியுள்ளார்..
இந்நிலையில் ஊரடன் அடிகள் வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லாம இருந்தார்.. அவர் கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நள்ளிரவில் உயிரிழந்தார். ஊரன் அடிகளார் இறுதி சடங்குகள் வடலூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..