பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜாகிர் உசேனுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், கடந்த வாரம் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக நேற்று தகவல் பரவியது.
ஆனால், ஜாகிர் உசேன் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்தனர். மேலும், ஜாகிர் உசேன் உடல்நிலை குறித்து யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில், தற்போது அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜாகிர் உசேன், பிரபல தபேலா இசை மேதை உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகன் ஆவார். ஜாகிர் உசேன் சிறுவயது முதலே இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பிலும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார். இசை சேவைக்காக பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகள் ஜாகிருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், சர்வதேச அளவில் உயரிய விருதான கிராமி விருதை 4 முறை வென்றுள்ளார்.
Read More : மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி..!! சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா..!!