ஹீரோ, காமெடியன், குணச்சித்ர நடிகர் போன்ற பன்முகங்களை கொண்டவர் தான் நடிகர் எஸ்.வி.சேகர், அவர் சினிமா மட்டுமின்றி அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், சர்ச்சைகளுக்கும் பேர் போனவர். தற்போது எஸ்.வி.சேகர் பாஜகாவில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் உடல் நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமணியி அனுமதிக்கப்பட்டுள்ளார், இது குறித்து அவரே பதிவு ஒன்றை போட்டுள்ளார், அந்த பதிவில் ” இன்று காலையில், வெர்டிகோவுடன் அடிக்கடி வாந்தியும் ஏற்பட்டதால், உடனடியாக மெட்ராஸ் இஎன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
கடவுள் கருணையினாலும், மருத்துவர் கவனிப்பாலும் குணமடைந்து வீடு திரும்பினேன். இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் பாடம் கற்கிறோம். இனிமேல் ஆயில் மசாஜ் எடுத்துக்கொள்ளவே மாட்டேன், பிரார்த்தனைக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். ஆயில் மாசாஜ் எடுத்து கொண்டதால் இப்படி பக்க விளைவுகள் வரும் என்பது அதிர்ச்சியடைய செய்துள்ளது.