fbpx

பிரபல தமிழ் நடிகை சீதா வீட்டில் திருட்டு..!! எதை காணவில்லை..? போலீசில் பரபரப்பு புகார்..!!

சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் நடிகை சீதா வசித்து வருகிறார். இந்நிலையில், சீதாவின் வீட்டில் இருந்து இரண்டரை சவரன் ஜிமிக்கி திருடு போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை சீதா புகாரளித்தார். அந்த புகாரில் தனது வீட்டில் இருந்த இரண்டரை சவரன் ஜிமிக்கியை காணவில்லை. அதை யாரோ திருடி விட்டார்கள்.

எனவே, காணாமல் போன எனது ஜிமிக்கியை கண்டுபிடித்து தர வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். நடிகை சீதா வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகையை திருடியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளில் பிரிந்த பார்த்திபன் – சீதா

நடிகரும் இயக்குநருமான, பாண்டியராஜன் இயக்கத்தில் 1985இல் வெளியான, ‘ஆண் பாவம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சீதா. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. பின்னர், நடிகரும் இயக்குநருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்தனர். அதைத்தொடர்ந்து எங்கும் பெரிதாக தலைகாட்டாமல் இருந்து வந்த நடிகை சீதா, சீரியல்களில் நடித்தார். இப்போது வெப் சீரிஸ்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

Read More : “தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது”..!! கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கேவியட் மனு தாக்கல்..!!

English Summary

Actress Seetha filed a complaint at the Virugambakkam police station in Chennai. In that complaint, she reported that a two-and-a-half sovereign jimmy was missing from her house.

Chella

Next Post

டிகிரி இல்லாமலேயே லட்சத்தில் சம்பளம் கிடைக்கும் வேலைகள்..!! என்னென்ன தெரியுமா?

Fri Nov 22 , 2024
High Paying Jobs in India Without Degree
job career

You May Like