பிரபல பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் உயிரிழந்தார்.. அவருக்கு வயது 49.
தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் பாடகர் பாக்யா.. சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த சிம்டாங்காரன் பாடலை பாடியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.. பின்னர் 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடல் இவர் பாடியது தான்.. இதே போல் சர்வம் தாள மயம், அன்பறிவு, இரவின் நிழல் ஆகிய படங்களில் அவர் பாடல்களை பாடி உள்ளார்.. பிகில் படத்தில் இடபெற்ற காலமே காலமே பாடலை பாடியிருப்பார்.. மேலும் அவர் பாடிய ராட்டி என்ற ஆல்பம் பாடல் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது..
மணிரத்னத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான பொன்னி நதி பாடலில் இடம்பெற்றிருக்கும் ஆரம்ப வரிகளை பாடியதும் இவர் தான்.. இந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது..
இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.. எனினும் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.. அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..