fbpx

தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை… அவரே வெளியிட்ட தகவல்…

பிரபல சின்னத்திரை நடிகை கனிஷ்கா சோனி, தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்..

குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த கனிஷ்கா, கடைசியாக தேவி ஆதி பராசக்தி என்ற தொலைக்காட்சி தொடரில் கங்கா தேவியாக நடித்தார். பின்னர் அவர் சின்னத்திரையில் நடிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.. தோ தில் ஏக் ஜான், டெவோன் கே தேவ்…மஹாதேவ், மகாபாரத், பவித்ரா ரிஷ்டா, பெகுசராய், சங்கத்மோச்சன் மகாபலி ஹனுமான், குல்ஃபி குமார் பஜேவாலா உள்ளிட்ட பல டிவி சீரியல்களில் அவர் நடித்துள்ளார்.. 2013 ஆம் ஆண்டு பத்தாயிரம் கொடி படத்தில் தமிழில் அறிமுகமானார், அதைத் தொடர்ந்து முறையே தேவராயா, யுவ ராஜ்யம் போன்ற தெலுங்கு படங்களில் நடித்தார்..

இந்நிலையில் கனிஷ்கா சோனி, தன்னை தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், இதுதொடர்பான புகைப்படங்களையும் பகிரிந்துள்ளார்.. திருமணமான பெண்கள் வைப்பது போன்று நெற்றியில் குங்குமம் வைத்திருப்பது போலவும், தாலி அணிந்திருப்பது போலவும் அவர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்..

மேலும் அவரின் பதிவில் “ எனது கனவுகள் அனைத்தையும் நான் நிறைவேற்றியதில் இருந்து என்னையே திருமணம் செய்துகொண்டேன் & நான் காதலிக்கும் ஒரே நபர் நான் தான்.. எனக்கு எந்த ஆண்களும் தேவையில்லை. நான் தெய்வம்.. வலிமையும் சக்தியும், சிவன் மற்றும் சக்தி எல்லாம் எனக்குள் இருக்கிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்..

எனினும் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட முதல் நபர் கனிஷ்கா அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், குஜராத்தை சேர்ந்த ஷமா பிந்து என்ற பெண் தன்னை தானே செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

உத்யோக் ஆதார் என்றால் என்ன..? அதனால் என்ன நன்மை..? விவரம் உள்ளே..

Fri Aug 19 , 2022
இந்தியாவில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக ஆதார் அட்டை இருக்கிறது.. மேலும் அரசின் நலத்திட்டங்களை பெறுவது, வங்கிக் கணக்கு என அனைத்து முக்கிய ஆவணமாக ஆதார் மாறியுள்ளது.. ஆனால் உத்யோக் ஆதார் (Udyog Aadhar) பற்றி உங்களுக்கு தெரியுமா..? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. உத்யோக் ஆதார் என்றால் என்ன? உத்யோக் ஆதார் என்பது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) சிறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகத்தால் […]

You May Like