fbpx

மர்மங்களை கொண்டுள்ள உலகின் பிரபல படைப்புகள்!… சுவாரஸிய தகவல்கள்!

உலகிலுள்ள பிரபல படைப்புகள் ஒரு சில மர்மங்களை கொண்டிருப்பதை நாம் காண முடியும். அப்படிப்பட்ட 5 பிரபல படைப்புகளையும் அவற்றிலுள்ள, பெரும்பாலானோருக்கு தெரியாத சில விஷயங்களைப் பற்றியும் இப்போது பார்ப்போம்.

மிகவும் பிரபலமான நினைவுச் சின்னமான ஈபிள் டவரின் உச்சியில், அதனைக் கட்டியவர் ஒரு விடயத்தைச் செய்துள்ளார். அதாவது ஓய்வெடுத்துக் கொள்வதற்கும் விருந்தினர்களை வரவேற்கவும் சமையலறை, குளியலறை, வரவேற்பறை மற்றும் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீட்டை மலையுச்சியில் கட்டினார். அதில் இருந்துகொண்டு பரிஸ் நகரத்தை இரசிக்கலாம். ஒரு சந்தர்ப்பத்தில் தோமஸ் அல்வா எடிசனுடன் நீண்ட உரையாடலையும் நிகழ்த்தினார். இன்று இந்த அப்பார்ட்மெண்ட் ஒரு அருங்காட்சியமாக செயற்படுகிறது. மேலும் அங்கு அவர்கள் இருவரும் உரையாடுவது போன்ற மெழுகுச்சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

எகிப்து நாட்டின் கீசா நகரில் அமைந்திருக்கும் ஸ்பின்ஸ் சிலை மனித முகத்தையும் மிருக உருவத்தையும் கொண்டுள்ள உலகின் மிகப் பழைமையான சிலையாகும். பல நூற்றாண்டுகளாக வெயில் மற்றும் மணல் புயல் பாதிப்பால் அதன் அசல் நிறத்தை இழந்து மஞ்சள் நிறமாக காட்சியளிக்கிறது. இந்த சிலை அதன் ஆரம்ப காலத்தில் பிரகாசமான வண்ணப் பூச்சிகளால் நிறந்தீட்டப்பட்டிருக்கலாம் எனவும் அதற்கு சான்றுகளாக சில துண்டுகள் இந்த சிலையின் காதுகளில் பின்னால் இன்றும் உள்ளன. இவற்றில் எஞ்சிய துண்டுகளைப் பிரிட்டிஷ் மற்றும் எகிப்திய அருங்காட்சியகங்களில் காணலாம். ஆய்வாளர்கள் இந்த ஸ்பிங்ஸ் சிலை, சிங்கத்தின் தலையை போன்ற உருவத்தை கொண்டிருக்கலாம் எனவும் காலப்போக்கில் அது சிதைவடையவே அதனை மனித முகமாக மாற்றி இருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.

இத்தாலியின் பிசா நகரில் உள்ள உலக பிரபலமான இந்த சாய்கோபுரத்தின் சிறப்பே இது சாய்ந்து காணப்படுவதுதான். ஆனால் இந்த கோபுரம் அதன் அருகே இருக்கும் கதீட்ரல் தேவாலயத்தின் மணிக்கூடு என்பது பலருக்கும் தெரியாத விஷயம் ஆகும். மேலும் இந்த மணிக்கூட்டு கோபுரத்தை கட்டியது யார் என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில் இந்த கோபுரத்தின் கட்டுமானம் பலமுறை தடைப்பட்டு சுமார் 200 ஆண்டுகளாக கட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும் வரலாற்று ஆய்வாளர்கள் வூனானோ பிஸ்சனோ என்பவரால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறார்கள்.

லண்டன் நகரத்தின் அடையாளமாக திகழ்ந்துவரும் பிக் பென் இதனுள் இருக்கும் மிகப்பெரிய மணிக்கூட்டையே குறிக்கின்றது. 2012 செப்டெம்பர் மாதம் இதன் பெயரை தி எலிசபெத் டவர் என மாற்றியுள்ளார். இந்த கோபுரத்தில் உள்ள மணிக்கூட்டிற்கு பிக் பென் என்ற பெயர் எப்படி வைக்கப்பட்டதென யாருக்கும் தெரியாது. ஆய்வாளர்களின் கோட்பாட்டின் படி இந்த கோபுரத்தை கட்டியவரின் பெயர் இதற்கு வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.

நியூயார்க் நகரின் சின்னமாக விளங்கக்கூடிய இந்த தீச்சுடர் ஏந்திய லிபெர்ட்டி பெண் சிலை தன்னுள் சில வரலாற்றையும் பொதித்துள்ளது. இதனை தமிழில் சுதந்திர தேடி சிலையென்றும் கூறுவார்கள். அமெரிக்க புரட்சியின் 100 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு இந்த சிலை பிரான்ஸினால் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. இது ஜனநாயகம், சுதந்திரம், அடிமைத்தன ஒழிப்பு போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் வழங்கப்பட்டது. இதன் காரணமாகவே இந்த சிலையின் கால்களுக்கு உடைந்த சங்கிலி போன்ற அமைப்பு காணப்படும். இந்த அமைப்பானது, சிலையின் மேலிருந்து கீழே பார்த்தால் மாத்திரமே தெரியும். இந்த சிலையின் மேல் காணப்படும் 7 முட்கள் ஏழு கணடங்களை குறிக்கின்றது.

Kokila

Next Post

வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்...! 3 ஆண்டில் 13 லட்சம் பெண்கள் காணவில்லை...! மத்திய அரசு தகவல்

Wed Aug 2 , 2023
2019 மற்றும் 2021-க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 13 லட்சம் சிறுமிகள் மற்றும் பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சுமார் 2 லட்சம் பேர், இரண்டாவது இடத்தில் மேற்கு வங்க மாநிலம் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது. 2019 முதல் 2021 வரை நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 10,61,648 பெண்களும், 18 வயதுக்குட்பட்ட 2,51,430 சிறுமிகளும் […]

You May Like