fbpx

பெண்களிடம் அத்துமீறி பேசும் பிரபல யூடியூபர்..!! நடிகையை கூட விட்டு வைக்கல..!! பிரஷாந்த் ரங்கசாமியை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்..!!

பெண்களிடம் அத்துமீறி பேசுவதாக கூறி, பிரபல யூடியூபரான பிரஷாந்த் ரங்கசாமியின் பதிவுகளை வெளியிட்டு, நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் Influencer மற்றும் திரைப்பட விமர்சகருமான பிரஷாந்த் ரங்கசாமி சோசியல் மீடியா பிரபலமாக பார்க்கப்படுபவர். திரைப்பட விமர்சனங்களுக்கு காசு வாங்கிக் கொண்டு, விமர்சனம் சொல்லுவதாக ஏற்கனவே பல தகவல்கள் உலா வந்தன. அந்த வகையில், தற்போது பெண்களிடம் அத்துமீறி பேசி புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

நடிகை பிரியா ஆனந்த், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டபோது, ”மொரட்டு சிங்கிள்ஸ் பாவம்” என அவரை டேக் செய்திருந்தார் பிரஷாந்த். இதற்கு கடுப்பான பிரியா ஆனந்த் ”பாண்டா” என மூஞ்சில் அடித்ததுப்போல் பதிலடி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, பெண் ஒருவரிடம் காதல் மன்னனாக மாறி சாட்டிங் செய்திருக்கிறார்.

அந்த பெண்ணுக்கு வலைவிரித்த நிலையில், இதுதொடர்பாக ஸ்கிரீன் ஷாட்டும் சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகிறது. மெசேஜில் அந்த பெண் எப்படி இருக்கீங்க? என்று கேட்கிறார். அதற்கு பிரசாந்த், ”நீங்கள் என்னுடைய பல நாள் காதல்” எனக்கூறி உருட்டுகிறார். பின்னர், அந்த பெண் நாசுக்காக இவரை தவிர்க்க நினைத்து அவர் கொடுத்த பதிலில் இருந்தே பார்க்க முடிகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள், ‘பெண்களை பிரஷாந்த் ரங்கசாமியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்’ என்று #SaveGirlsFromPrashanth என பதிவிட்டு வருகின்றனர்.

Read More : இன்ஸ்டாவில் பேசிய ஒரு மணி நேரத்தில் வாட்ஸ் அப்பில் வந்த நிர்வாண வீடியோ கால்..!! ரூ.2.50 லட்சத்தை இழந்த வங்கி ஊழியர்..!!

English Summary

Netizens are slamming popular YouTuber Prashant Rangasamy for allegedly harassing women.

Chella

Next Post

இந்தியர்களே பிடிக்காது.. நான் பிரதமர் ஆனால் இந்தியா மீது அணுகுண்டு வீசுவேன்..!! -  யூடியூபர் பேச்சால் சர்ச்சை

Fri Aug 23 , 2024
British YouTuber Miles Routledge has created controversy by saying, 'I am the Prime Minister of Britain but I will drop a nuclear bomb on India

You May Like