fbpx

ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கு..!! CWC போட்டியாளர்களாக களமிறங்கும் 8 முக்கிய பிரபலங்கள்..!! லிஸ்ட் இதோ..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் 5-வது சீசன் தொடங்க உள்ளது. இதற்கிடையே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் அதில் இருந்து விலகியது. அதே போல் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட்டும் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்த நிகழ்ச்சி தொடங்கும். ஆனால், இந்த சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி வந்த குழு, இயக்குனர், நடுவர் ஆகியோர் அடுத்தடுத்து விலகியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியானது. அதில் வெங்கடே பட்டுக்கு பதில் பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொள்வது உறுதியானது. இதனால், இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது.

இந்நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தற்போது, இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா, நடிகை வடிவுக்கரசி, பாண்டியன் ஸ்ட்ரோஸ் 2 நடிகர் வசந்த், சமையல் கலைஞர் கிருஷ்ணா மெக்கன்ஸி, நடிகை திவ்யா துரைசாமி, இளம் நடிகை ஷாலின் ஜோயா உள்ளிட்ட 8 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னரே யாரெல்லாம் கலந்து கொள்கின்றனர் என்பது உறுதியாக தெரியும்.

Read More : இந்த தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி..? கொ.ம.தே.கட்சியின் Ex வேட்பாளர் சதி..!! சொந்த கட்சிக்குள் இப்படியா..?

Chella

Next Post

பெரும் சோகம்..!! அப்துல் கலாமின் ஆசிரியர் சின்னதுரை மறைவு..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல்..!!

Thu Apr 11 , 2024
அருட்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை சே.ச. மறைவுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”திருச்சி புனித வளனார் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முதலிய பல சான்றோர்களை உருவாக்கிய அருட்தந்தை லடிஸ்லாஸ் சின்னதுரை சே.ச அவர்கள் (101) வயது மூப்பின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருந்துகிறேன். ஆசிரியப் பணியிலும் இறைத்தொண்டிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் […]

You May Like