மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அங்காடித்தெரு படத்தின் நடிகை சிந்து இன்று அதிகாலை 2.15 மணிக்கு காலமானார்.
அங்காடித்தெரு திரைப்படத்தில் நடித்ததில் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சிந்து. இவர் மேலும் நாடோடிகள், தெனாவெட்டு, கருப்பசாமி குத்தகைதாரர், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் சிந்து. புற்றுநோய் பரவியதில் ஒரு பக்கம் மார்பகம் எடுக்கப்பட்டது. இந்நிலையில் அவரின் இன்னொரு மார்பகத்திலும் புற்றுநோய் பரவிவிட்டது. தான் மருத்துவ செலவுக்குக் கூட பணம் இல்லாமல் மிகவும் சிரமம் பட்டு வருவதாகவும், நடிகர்கள் உதவி செய்தால் தன்னால் சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டு வர முடியும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
நோய் தாக்கம் அதிகமானதால் சிந்துவுக்கு ஒரு கை முற்றிலுமாக செயலிழந்து படுத்த படுக்கையாக இருந்தார். நாளுக்கு நாள் உடல் நலம் குறைந்து வந்த நிலையில் நடிகை சிந்து இன்று அதிகாலை 2.15மணிக்கு காலமானார். சிந்துவின் மரணம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இது மாதிரி நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி துணை நடிகர்கள் இறப்பது இது ஒன்றும் புதிதல்ல, நிறைய நடிகர்கள் உதவி செய்தாலும், சில பேருக்கு உதவி கிடைப்பதில்லை என்பதே உண்மை.